crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வுகள் இடம்பெற்று வருகின்றது.

இதற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமான கே.கருணாகரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மாவட்டத்திலும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வொன்று இன்று (04) வெள்ளிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் பி.ப 12 மணிவரை புனித மிக்கேல் கல்லூரியின் சிரேஸ்ட சாரணர் குழுவின் ஏற்பாட்டில் புனித மிக்கேல் கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.

சாரண ஆசிரியரும் மட்டக்களப்பு மாவட்ட செயலக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மாவட்ட இணைப்பாளருமான பீ.டினேஸ் தலைமையில் சிரேஸ்ட சாரணர் ஆர்.சாலோமின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு செயலமர்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன் கலந்துகொண்டிருந்ததுடன், போதைப்பொருள் பாவனையினையை கட்டுப்படுத்துவதன் அவசியம் தொடர்பான கருத்துரையினையும் வழங்கியிருந்தார்

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் சிரேஸ்ட மற்றும் கனிஷ்ட பிரிவு சாரண மாணவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 3 + 6 =

Back to top button
error: