crossorigin="anonymous">
உள்நாடுபொது

தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டமூலம் 2வது மதிப்பீடு

the Personal Data Protection Bill

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் உள்ளிட்ட சில சட்டமூலங்கள் எதிர்வரும் வாரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (03) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

பாராளுமன்றம் எதிர்வரும் 08ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கூடவுள்ளது. எதிர்வரும் 08ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவிருப்பதுடன், மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணிவரை புலமைச் சொத்து (திருத்தச்) சட்டமூலத்தை (இரண்டாவது மதிப்பீடு) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.

மார்ச் 09ஆம் திகதி மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மார்ச் 08 மற்றும் 09ஆம் திகதிகளில் மு.ப 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தினங்களில் பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பி.ப 4.50 மணி முதல் பி.ப 5.30 மணிவரையான காலப் பகுதியில் முறையே ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதமும் நடைபெறவுள்ளது.

மார்ச் 10ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் பி.ப 12.30 மணி வரை வேலையாட்கள் நட்டஈடு (திருத்தச்) சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதன் பின்னர் மதிய போசன இடைவேளை இன்றி பி.ப 12.30 முதல் பி.ப 5.30 மணிவரை நாட்டில் நிலவும் எரிசக்திப் பிரச்சினை தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்துக்கு நேரம் ஒதுக்குவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

மார்ச் 11ஆம் திகதி மு.ப 10.00 மணி முதல் 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள “60 வயதைத் தாண்டியவர்களை சமூகத்தில் முனைப்பான நபர்களாக ஆக்குகின்ற வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்” தொடர்பான தனிநபர் பிரேரணையும்,

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள “உள்நாட்டு விதை உற்பத்திச் செயன்முறையினை உயிர்ப்பூட்டுதல்” தொடர்பான தனிநபர் பிரேரணையும்,

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினீ குமாரி விஜேரத்ன அவர்களால் முன்வைக்கப்பட்ட “இலங்கையில் உளவியல் ஆலோசகர்களை/உளவியல் சிகிச்சையாளர்களை ஒழுங்குறுத்தல்” குறித்த தனிநபர் பிரேரணையும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதன் பின்னர் பி.ப 3.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை காணி அபிவிருத்தித் (திருத்தச்) சட்டமூலத்தை (இரண்டாவது மதிப்பீடு) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 8 + 1 =

Back to top button
error: