இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 12.03.2022 மற்றும் 13.03.2022 ஆகிய திகதிகளில் பல்கலைக்கழக நல்லையா ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள இப் பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் வைத்திய கலாநிதி வே.விவேகானந்தராஜா தலைமையில் நடைபெறும்.
விழாவின் 1ஆம் நாள் அமர்வுகளில் விசேட அதிதியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப – தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சந்தன பீ.உடவத்தவும்,
2ஆம் நாள் அமர்வுகளில் விசேட அதிதியாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.கபில சீ.கே.பெரேராவும் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் விசேட உரையினையும் ஆற்றவுள்ளனர்.
முதலாவது நாள் இடம்பெறவுள்ள பட்டமளிப்பு நிகழ்வுகள் மூன்று அமர்வுகளாக இடம்பெறவுள்ளதுடன், இதன்போது 883 மாணவர்களும்,
இரண்டாம் நாள் இடம்பெறவுள்ள மூன்று அமர்வுகளின்போது 1075 மாணவர்களுமாக முதுமானி, இளமானிப் பரீட்சைகளில் சித்தி பெற்ற 1,958 மாணவர்கள் தங்களுக்கான பட்டங்களை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.