crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை பாராளுமன்றம் இன்று கூடுகின்றது

இலங்கை பாராளுமன்றம் இன்று 08ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கூடவுள்ளது. இன்று 08ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவிருப்பதுடன், மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணிவரை புலமைச் சொத்து (திருத்தச்) சட்டமூலத்தை (இரண்டாவது மதிப்பீடு) விவாதத்துக்கு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.

மார்ச் 09ஆம் திகதி மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மார்ச் 08 மற்றும் 09ஆம் திகதிகளில் மு.ப 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தினங்களில் பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பி.ப 4.50 மணி முதல் பி.ப 5.30 மணிவரையான காலப் பகுதியில் முறையே ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதமும் நடைபெறவுள்ளது.

மார்ச் 10ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் பி.ப 12.30 மணி வரை வேலையாட்கள் நட்டஈடு (திருத்தச்) சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதன் பின்னர் மதிய போசன இடைவேளை இன்றி பி.ப 12.30 முதல் பி.ப 5.30 மணிவரை நாட்டில் நிலவும் எரிசக்திப் பிரச்சினை தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்துக்கு நேரம் ஒதுக்குவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 3 =

Back to top button
error: