சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கண்காட்சியும் பொருள் விற்பனையும்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஓட்டமாவடி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பெண்களினால் மேற்கொள்ளப்படும் உள்ளுர் தொழில் முயற்சியாளர்களின் கண்காட்சியும் பொருட்கள் விற்பனையும் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (08) திகதி இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் வீ.தவராஜாவின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கல்குடா கல்வி வலய உதவி கல்வி பணிப்பாளர் திருமதி எம்.ஏ.றிஸ்மியா பானு, கைத்தொழில் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கீர்த்தனா சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெ.ஹாபீலா, தேசிய தொழில் முயற்சி அதிகார சபை உத்தியோகத்தர் திருமதி எச்.யூ.ஹப்ஸா, ஏற்றுமதி அபிவிருத்தி சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பி.யூ.ஹபிபா, சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம்.சுகைர் மற்றும் எம்.எப்.சிபானா ஆகியோரின் ஏற்பாட்டில் உள்ளுர் தொழில் முயற்சியாளர்களின் கண்காட்சியும் பொருட்கள் விற்பனையும் இடம் பெற்றது.
இதில் உள்ளுர் தொழில் முயற்சியாளர்களின் சிரட்டையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், மர வேலைப்பாடுடனான பொருட்கள், மட்பாண்ட பொருட்கள் தையல் அலங்காரம் போன்ற பொருட்கள் கண்காட்சியில் காட்சிப்பபடுத்தப்பட்டதுடன் விற்பனையும் செய்யப்பட்டது.