ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 25 ஆவது வருடாந்த மகாநாடு இன்று 12 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு அல் ஹிதாயா கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
இவ் வருடாந்த மகாநாட்டில் பிரதம அதிதியாக ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும கலந்துகொண்டு சிறப்பித்ததோடு இதன்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
நிகழ்வில் மீடியா போரத்தின் புதிய நிர்வாக உத்தியோகத்தர்களும் தெரிவு செய்யப்பட்டனர் அத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் வெளியிடப்படும் 6ஆவது வெளியீடான “2022 MEDIA DIRECTORY ” வெளியிட்டு வைக்கப்பட்டன
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 25 ஆவது வருடாந்த மகாநாடு அரசினால் வெளியிடப்பட்டுள்ள கோவிட்19 சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய நடைபெற்றதோடு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அங்கத்தவர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது