ஓட்டமாவடி அனீகா முன்பள்ளியின் மாணவர் பரிசளிப்பு விழா
ஓட்டமாவடி – 03 அனீகா முன்பள்ளியின் 2021ஆம் ஆண்டுக்கான 20ஆவது மாணவர் வெளியேற்று விழாவும் பரிசளிப்பு வைபவமும் கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில் 10.03.2022 தினம் மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
முன்பள்ளியின் ஆசிரியர்களான றிபாயா, அஸ்மியா, றிஸானா ஆகியோரின் நெறிப்படுத்தலில் மாணவ, மாணவிகளின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நெளபர் அவர்களும், கௌரவ அதிதியாக பிரதித்தவிசாளர் ஏ.ஜீ.அமீர் அவர்களும் கலந்து சிறப்பித்துடன்
விஷேட அதிதிகளாக ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலயத்தின்அதிபர் எம்.ஏ.ஸாபிர், ஓட்டமாவடி மூன்றாம் வட்டார கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எம்.ஐ.எம்.புகாரி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் என்.எம்.இஸ்மாயில் உள்ளிட்ட முக்கிய அதிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.