crossorigin="anonymous">
உள்நாடுபொது

‘எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர குறைந்தது ஏழு மாதங்களாகும்’

தற்போதைய எரிபொருள் நெருக்கடி மற்றும் எரிவாயு பிரச்சினை முடிவுக்கு கொண்டுவர குறைந்தது இன்னும் ஏழு மாதங்கள் ஆகும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

அதற்கமைய உலக அரங்கில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘உலகளாவிய பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நாட்டிற்கு டொலர்களை கொண்டு வருவதற்கு தேங்காய்களை விற்க முடியாது.

டொலர்களை கொண்டு வருவதில் உள்ள சிரமத்தின் ஆரம்ப கட்டத்தில் உள்ளோம்’ என அமைச்சர் லொகுகே தெரிவித்தார்.

எனவே சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதியை பலப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி முயற்சிக்கின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய பிரச்சினைகளை சமாளிப்பதற்கு அரசாங்கத்திற்கு குறைந்தது ஏழு முதல் எட்டு மாதங்கள் ஆகும் என அமைச்சர் லொக்குகே தெரிவித்தார்.

அதிகளவிலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருக்கவில்லை என்பதுடன் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குறைந்தளவில் எரிபொருள் இருந்தாலும் அதனை பெற்றுக்கொள்ள பல மணித்தியாலங்கள் மக்கள் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது.

இந்நிலையில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில், பொறுமையை இழந்த மக்கள் தமது எதிர்ப்பினை வௌியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 82 + = 84

Back to top button
error: