கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணத்தை அதிகரிக்க இலங்கை கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்று (13) முதல் அமுலாகும் வகையில் கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 60% இனால் அதிகரிக்கப்படுவதாக, அச்சங்கம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டிற்குள இறக்குமதி செய்யப்பட்டு கொள்கலன்கள் மூலம் இவ்வாறு போக்குவரத்து செய்யப்படும் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்குமென இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.