பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பிலான யோசனை நாளை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதன் பின்னர், அது தொடர்பில், தீர்மானிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பேருந்து சங்கங்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், அவர் ஊடகங்களுக்கு இதனைக் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக, பேருந்து பயண கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பேருந்து சங்கங்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றன.