2021ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின.
இந்த பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தள பக்கத்தில் பார்வையிடலாம்.
கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி இடம்பெற்ற 2021ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு 340,508 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
2,943 பரீட்சைகள் நிலையங்கள் இதற்காக தயார் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.